கோட்டபாய ராஜபக்‌ஷ மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி

கோட்டபாய ராஜபக்‌ஷ மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

D.A. ராஜபக்‌ஷ அருங்காட்சியகத்திற்காக செலவிடப்பட்ட அரச நிதி தொடர்பில், விசாரிப்பதற்கான மேல் நீதிமன்றத்தின் சட்ட வலுவை சவாலுக்கு உட்படுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷ தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கே இன்று திகதி நிர்ணயம் செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வென்னப்புள்ளி மற்றும் அர்ஜூன ஒபேசேக்க ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.LEAVE A COMMENT