நாணயக்குற்றி விநியோகத்திற்கான விசேட கருமபீடம் நாளை திறக்கப்படவுள்ளது

நாணயக்குற்றி விநியோகத்திற்கான விசேட கருமபீடம் நாளை திறக்கப்படவுள்ளது

நாணயக்குற்றி விநியோகத்திற்கான விசேட கருமபீடம் இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்தக் கருமபீடமானது நாளைய தினம் திறந்துவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தின் தரைத்தளத்திலேயே நாணயக்குற்றி விநியோகத்திற்கான விசேட கருமபீடம் அமைந்திருக்கும்.

பொதுமக்களுக்கு நாணயக் குற்றிகள் வழங்கும் நோக்குடன் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள இந்தக் கருமபீடம்,  புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் முற்பகல்  9 மணி முதல் முற்பகல்  11 மணி வரை, இயங்கவுள்ளது.

எனினும், அரச மற்றும் வங்கி விடுமுறை தினங்கள் தவிர்ந்த தினங்களிலேயே, இந்த விசேட கருமபீடம் இயங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் இந்த விசேட கரும பீடத்திலிருந்து நபரொருவர், ஒரே தடவையில் அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நாணயக்குற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.


LEAVE A COMMENT