நாளை வானிலையில் மாற்றம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.

நாளை வானிலையில் மாற்றம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை மிகவும் வெப்பமான வானிலை நிலவுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி வடமேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை , ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அதிக வெப்பமான வானிலையின் போது உடல் நீர் இழப்பை தவிர்ப்பதோடு, நோய் ஏற்படாது தடுக்கும் வலிமுறைகளை கையாளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.LEAVE A COMMENT