இலங்கை அணியின் தலைமையை ஏற்க மறுத்த மெத்தியுஸ்

இலங்கை அணியின் தலைமையை ஏற்க மறுத்த மெத்தியுஸ்

எதிர்வரும் உலககிண்ண போட்டியின் போது இலங்கை அணியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு விடுக்கப்பட்டிருந்த  கோரிக்கையை  இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியுஸ் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

எனினும்ஶ்ரீலங்கா கிரிக்கெட் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பினையும் வெளியிடவில்லை.

 

அஞ்சலோ மெத்தியுஸ் இலங்கை அணியின் தலைமை பொறுப்பில் இருந்து பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் மாதம் நீக்கப்பட்டிருந்தார்.

 

இதேவேளைஅஞ்சலோ மெத்தியுஸ்  இதுவரையில் 106 போட்களில் தலைமை தாங்கியதுடன்அதில் 49 வெற்றிகளையும், 51 தோல்விகளையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது.

 

மேலும்உலககிண்ண போட்டி அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில்உலககிண்ண தொடரின் வெற்றிக்கிண்ணம் இன்று பாக்கிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


LEAVE A COMMENT