மரங்களை வெட்டப் பயன்படுத்தும்  மோட்டார் வாள்கள் பதிவு செய்யப்படவில்லை

மரங்களை வெட்டப் பயன்படுத்தும் மோட்டார் வாள்கள் பதிவு செய்யப்படவில்லை

கடந்த மூன்று வருடங்களில் மரங்களை வெட்டப் பயன்படுத்தும் பெருமளவான  மோட்டார் வாள்கள் பதிவு செய்யப்படவில்லை என  இலங்கை சூழல் பாதுகாப்பு மத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.

 

கடந்த மூன்று வருட காலப்பகுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம்  மோட்டார் வாள்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 37 ஆயிரம் இயந்திரங்கள் மாத்திரமே சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

சூழல் பாதுகாப்பைக் கருதி குறித்த இயந்திரங்களை பதிவு செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டமைக்கு அமைவாக, பதிவு செய்யும் நடவடிக்கைகள் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட.

 

இதற்கமைய, அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாவனையாளர்கள் அனைவரும் தம்மிடம் உள்ள மரம் வெட்டப்பயன்படுத்தும் மோட்டார் வாள்களை அருகிலுள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்வதற்கு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

 

எனினும், மக்களின் நலன்கருதி மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரையில் மீண்டும்  காலஅவகாசம் வழங்கப்பட்டது.

 

இதன்மூலம்  கடந்த மூன்று வருட காலப்பகுதியில் சுமார் 80 ஆயிரம் இயந்திரங்கள் பதிவு செய்யப்படவில்லை என  இலங்கை சூழல் பாதுகாப்பு மத்திய அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்

 

 


LEAVE A COMMENT