புதிய பிரதம நீதியரசர், கணக்காய்வாளர் நியமிப்பது தொடர்பில்  இறுதி தீர்மானம்

புதிய பிரதம நீதியரசர், கணக்காய்வாளர் நியமிப்பது தொடர்பில் இறுதி தீர்மானம்

புதிய பிரதம நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோரை நியமிப்பது தொடர்பில் எதிர்வரும் 30 திகதி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பான அரசியலமைப்பு சபைக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தற்போதைய கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவின் பதவிக்காலம் எதிர்வரும் 23 ஆம் திகதி நிறைவடையவுள்ள அதேவேளை, பிரதம நீதியரசர் நலின் பெரேராவின் பதவிக் காலம் எதிர்வரும் 29 ஆம் திகதி நிறைவடைகின்றது.

 

இந்த நிலையிலேயே, குறித்த பதவிகளுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திததி அரசியலமைப்பு சபைக் கூட்டத்தின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம், பிரதம நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோரை நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு சபையிடமே உள்ளமை குறிப்பிடத்தக்கது


LEAVE A COMMENT