ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாக அமெரிக்காவின் பிராந்திய மேயர் அறிவித்துள்ளார்

ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாக அமெரிக்காவின் பிராந்திய மேயர் அறிவித்துள்ளார்

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கவுள்ளதாக அமெரிக்காவின் South Bend பிராந்திய மேயர் Pete Buttigieg அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில், நாட்டை மறுசீரமைப்பதற்கு இளைஞர்கள் தயார் என்ற தொனிப்பொருளில் அவர் தனது முதலாவது தேர்தல் பிரசாரத்தை நேற்றைய தினம் ஆரம்பித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

37 வயதான Pete Buttigieg தான் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக அறிவித்து சில மணித்தியாலங்களின் பின்னர்,தனது தேர்தல் பிரசாரத்திற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக செலவழிக்கப் வோதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கொள்கைகளுக்கு மாற்றமாக புது யுகமொன்றை அமைப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

Pete Buttigieg, எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில்,அமெரிக்க வரலாற்றில் மிகவும் இளம் வயதில் ஜனாதி பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் பெறுவார் என அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிடுகின்றன


 


LEAVE A COMMENT