நீர்கொழும்பு இரத்தினக் கல் திருட்டு தொடர்பில் நால்வர் கைது

நீர்கொழும்பு இரத்தினக் கல் திருட்டு தொடர்பில் நால்வர் கைது

நீர்கொழும்பு பகுதியில் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான இரத்தினக் கல் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் கடந்த மாதம் இடம்பெற்றிருந்த நிலையில், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில்  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இரத்தினக் கல்லுடன், அதன் உரிமையாளரையும் சந்தேகநபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

இதன்போது, நிறுவனத்தின் உரிமையாளரிடம் இருந்து 50 ஆயிர ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள், பேலியகொடை குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

32 இற்கும் 48 வயதிற்கும் இடைப்பட்ட வய்காகல், ஹோமாகம, பங்கதெனிய உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்



LEAVE A COMMENT