2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிகெட் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிகெட் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிகெட் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டு கால போட்டித் தடைக்குப் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுடன் தொடர்பில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு சர்வதேச கிரிகெட் பேரவையினால் ஒரு ஆண்டு காலம் போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த போட்டியின் போது,ஆஸ்திரேலிய அணி வீரர் பேன்கிராப்ட், பந்தை சேதப்படுத்திய காட்சி வீடியோக்களில் பதிவாகியது.

இதற்காக பேன்கிராப்டுக்கு, சம்பளத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதோடு, இந்த நடவடிக்கை அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் திட்டப்படியே, இடம்பெற்றதாகக் கூறி அவர்களுக்கும் போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது`

இதேவேளை, 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிகெட் தொடருக்காக அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிகெட் தொடருக்கான இந்திய அணியின் பெயர் விபரங்களும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதுLEAVE A COMMENT