கொல்ப் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடரை டைகர் வூட்ஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளார்

கொல்ப் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடரை டைகர் வூட்ஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளார்

சர்வதேச கொல்ஃப் போட்டிகளில் பிரபலமான ஒரு தொடராகக் கருதப்படும் கொல்ப் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடரை 11 வருடங்களின் பின்னர் அமெரி்க்க வீரரான டைகர் வூட்ஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளார்.

இதன் பிரகாரம் ஐந்தாவது தடவையாக கொல்ஃப் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை டைகர் வூட்ஸ் கைப்பற்றியதுடன், இது அவர் கைப்பற்றிய 15 ஆவது பிரமாண்ட விருதாக பதிவாகியுள்ளது.

முதுகு வலி காரணமாக கடந்த சில காலமாக அவதிப்பட்ட 43 வயதான டைகர் வூட்ஸ், மீண்டும் கொல்ஃப் களத்தில் பிரகாசித்துள்ளமை அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் டைகர் வூட்ஸ் பெற்றுக் கொண்ட மிகப் பாரிய வெற்றியாக கொல்ஃப் மாஸ்டர்ஸ் கிண்ணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.LEAVE A COMMENT