CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நாட்டில் மீண்டும் ஒரு தாக்குதலா..... ?

நாட்டில் மீண்டும் ஒரு தாக்குதலா..... ?

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் முன்னெடுத்த தீவிரவாதத் தாக்குதல்களைப் போல, மேலும் தாக்குதலை முன்னெடுப்பதற்காக தீவிரவாதிகளின் மற்றுமொரு அணியொன்று தயார்நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவின் முன்னணி ஊடகமான hindustan times இந்தச் செய்தியை தனது இணையத்தளமூடாக நேற்றிரவு வெளியிட்டுள்ளது.

 

சர்வதேசத் தீவிரவாதத் தாக்குதலை தற்போது எதிர்கொண்ட நிலையிலுள்ள இலங்கைக்கு, இந்தியா "தொழினுட்பம் மற்றும் புலனாய்வுத்" தகவல்களை அளித்து உதவி வருகின்றது.

 

இந்தத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்தியத்தரப்பிலிருந்து கிடைத்த எச்சரிக்கைத் தகவல்களைப் பொருட்படுத்தாத நிலையில் பாரிய இழப்பை நாடு எதிர்கொண்டுள்ளது.

 

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடனான இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, இந்த விடயம் தொடர்இல் இந்தியா தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டியுள்ளது.

 

இதனையடுத்து இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உரையாடியுள்ளதாக hindustan times செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்த நிலையில், தீவிரவாதிகளின் மற்றுமொரு அணியின் மூலம், நாட்டில் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெறக்கூடும் என்ற எச்சரிக்கைத் தகவலை இந்தியப் பாதுகாப்பு அமைப்புகள் தற்போது வழங்கியுள்ளதாக  hindustan times அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

 


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்