CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு  கோரப்படுகின்றது பொது மக்களின் உதவி

சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு கோரப்படுகின்றது பொது மக்களின் உதவி

அண்மையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிலரை அடையாளம் காண்பதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை தலைமையகத்தினால் சகல ஊடக நிறுவனங்களுக்கும் சந்தேகநபர்களின் நிழற்படங்களுடன் பெயர்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் மொஹமட் இப்றாஹிம் சாதிக் அப்துல் ஹக், மொஹமட் இப்றாஹிம் ஷாஹிட் அப்துல் ஹக், மொஹமட் காசிம் மொஹமட் ரிழ்வான், பாத்திமா லதீஃபா, சாரா என்று அழைக்கப்படும் புலஸ்தினி ராஜேந்திரன் மற்றும் அப்துல் காதர் பாத்திமா காதியா ஆகிய ஆறு சந்தேகநபர்கள் தொடர்பில் காவல்துறை தலைமையத்திற்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் மூன்று பெண் சந்தேகநபர்களும் அடங்கியுள்ளனர்.

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின், காவல்துறை தலைமையகத்தின் 

071 - 859 17 71

011 - 24 22 176

011 - 23 95 605 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கமுடியும் என காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்