CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நீர்கொழும்பு பகுதியில் அமைதியின்மை - ஊரடங்கு சட்டம் அமுல். (VIDEO)

நீர்கொழும்பு பகுதியில் அமைதியின்மை - ஊரடங்கு சட்டம் அமுல். (VIDEO)

நீர்கொழும்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்குச் சட்டம் நாளை காலை 7 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு, போரதொட்ட பகுதியில் இன்று மாலை  இரண்டு தரப்புகளுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, கைகலப்பு ஏற்பட்டதாக தெரியவருகின்றது.

இதன்போது வாகனங்கள் சிலவற்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன், உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, உடனடியாக விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டதுடன், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு கெப்பிட்டல் நியூஸூக்கு கூறியது.

இந்த சூழ்நிலையின் கீழ், மேலும் பதற்றம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் நோக்கில், நீர்கொழும்பு காவல் பிரிவிற்குள் நாளை காலை 7 மணிவரை உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்