CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

தமிழ் ஈழம் சைபர் போஸ்ஸின் ஊடுறுவல் - இலங்கைக்கு அடுத்த நெருக்கடி

தமிழ் ஈழம் சைபர் போஸ்ஸின் ஊடுறுவல் - இலங்கைக்கு அடுத்த நெருக்கடி

நாட்டிலுள்ள சில முக்கிய இணையத்தளங்கள் மீது இன்று நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, தமிழ் ஈழம் சைபர் போஸ் என்ற குழுவின் மூலமே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. 

நாட்டிலுள்ள சில முக்கிய இணையத்தளங்கள் மீது  இன்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதனடிப்படையில் இலங்கையிலுள்ள குவைட் தூதரகத்தின் இணையத்தளம்,டொட் கொம் மற்றும் எல்.கே உள்ளிட்ட 10  வளைத்தளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை தேயிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட சில  இணைய தளங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட போதிலும் அவை மீள இயங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தநிலையில் மேலும் சில இணையதளங்களை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 2015 ஆம் ஆண்டும் நாட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்