நாட்டின் அனைத்து மதுபானசாலைகளுக்கு பூட்டு
- By Capital News --
- 03 Jun 2019
- 8146
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, கலால் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கோரிக்கை கடிதமொன்றை கலால் ஆணையாளர் நாயகத்திற்கு, மத்திய மாகாண ஆளுநர் அனுப்பிவைத்துள்ளார்.
நாட்டின் தற்போதை சூழ்நிலையின் கீழ், நபர்கள் மதுபோதையில் நடமாடுவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுப்பதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மைத்ரி குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் மதுபான சாலைகளை மூடுவதால், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு ஏதுவாக அமையும் என மத்திய மாகாண ஆளுநரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த விடயம் குறித்து கவனம் செலுத்துமாறும் கலால் ஆணையாளர் நாயகத்திடம் ஆளுநர் மைத்ரி குணரத்ன மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.