அமைச்சுக்களைத் துறந்தனர் முஸ்லிம்கள்! அரசாங்கத்தின் எதிர்காலம்?
- By Capital News --
- 03 Jun 2019
- 5881
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தங்களின் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சரவை உள்ள அமைச்சர், அந்தஸ்தற்ற அமைச்சர், இராஜாங்க அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகிய பதவிகளை வகிக்கும் முஸ்லிம் இனத்தவர்களே தமது அமைச்சுப்பொறுப்புகளைத் துறந்துள்ளனர்.
அலரி மாளிகையில், இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தப் பதவிவிலகலை அவர்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக அமைச்சர் ரிஷாத், மற்றும் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் தலைமையில், முஸ்லிம் அமைச்சர்கள் இன்று நண்பகல் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
இதனையடுத்தே, முஸ்லிம் இனத்தவர்கள் தமது அமைச்சுப்பொறுப்புகளைத் துறந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.