நாட்டைவிட்டு வெளியேறிய மோடி கூறியது என்ன தெரியுமா?
- By Capital News --
- 09 Jun 2019
- 2870
இலங்கைக்கான தனது விஜயம் குறுகியதாக இருப்பினும், மிகவும் பயனுள்ள ஒன்றாக அமைந்ததென இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
மாலைத்தீவு மற்றும் இலங்கை்கான விஜயங்களை இன்று நிறைவுசெய்த இந்திய பிரதமர் பிற்பகல் 4.15 க்கு மீண்டும் இந்தியா நோக்கிப் பயணமானார்.
இந்தியா திரும்பிய உடனடியாக இலங்கைக்கான விஜயம் குறித்து தனது டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் நரேந்திர மோடி கருத்துப் பதிவிட்டுள்ளார்.
இந்தியர்களின் மனங்களில் இலங்கைக்கு என ஒரு தனியிடம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியா எப்பொழுதும் இலங்கையுடனேயே இருந்து, அதன் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கும் இன்பதை இலங்கையிலுள்ள தனது சகோதர, சகோதரிகளுக்கு உறுதியுடன் கூறிக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைதள பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.