CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய பயணம் - ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

இலங்கையை டிஜிட்டல் மயமாக்கும் தேசிய பயணம் - ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

இலங்கையை நவீன தொழில்நுட்பத்துடன் கட்டியெழுப்புவதற்கான முக்கிய மைல்கல்லாக அமையும் தொடர்பாடல் நுட்பங்களை பலப்படுத்தும் தேசிய டிஜிட்டல் மயமாக்கத்திற்கான பயணம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, தேசிய டிஜிட்டல் மயமாக்கத்திற்கான பயணத்தை ஜனாதிபதி நேற்று ஆரம்பித்து வைத்தார்.

 

இதனூடாக Smart Government, Smart Security, Smart Transportation and Mobility, Smart Health ஆகிய துறைகளின் கீழ், நாட்டின் ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் உள்ளடக்கும் வகையிலான 16 எண்ணக்கருக்களின் ஊடாக நவீன தொழில்நுட்பத்துடனான இலங்கையை கட்டியெழுப்பும் பயணப் பாதை இதன்போது பிரகடனப்படுத்தப்பட்டது.

 

"எல்லையற்ற நீங்கள்" எனும் எண்ணக் கருவின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த செயற்றிட்டத்தினால் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் ஆகிய மூன்று தரப்பினரின் ஆற்றல்களை வரையறையின்றி விரிவுபடுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.


'தேசிய டிஜிட்டல் மயமாக்கத்திற்கான பயணம்' திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் வௌியிட்டு வைக்கப்பட்டது.

இதனையடுத்து நவீன தொழில்நுட்ப இலங்கை பற்றிய எதிர்கால குறிக்கோள்களை யதார்த்தமாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களை பாராட்டி, ஜனாதிபதி விருத்துகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்