CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நாட்டின் சுகாதார சேவைகள் துறையில் வைத்தியர்கள் உள்ளிட்ட 12 300 பேருக்கான பற்றாக்குறை

நாட்டின் சுகாதார சேவைகள் துறையில் வைத்தியர்கள் உள்ளிட்ட 12 300 பேருக்கான பற்றாக்குறை

நாட்டின் சுகாதார சேவைகள் துறையில் வைத்தியர்கள் உள்ளிட்ட 12 300 பேருக்கான பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

மேல் மாகாண சபையின் கேட்போர் கூட்டத்தில் நேற்று நடைபெற்ற மாகாண ஆளுநர்களின் கூட்டத்தின்போதே இந்த தகவல்கள் வௌியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2,300 வைத்தியர்கள், 8000 தாதி உத்தியோகத்தர்கள் மற்றும் 2000 சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தந்த மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து ஆளுநர்களால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

குடும்பநல சுகாதார தாதியர்கள் இரண்டாயிரம் பேருக்கான பற்றாக்குறையும் நிலவுவதுடன், 552 தாதி உத்தியோகத்தர்கள் பயிற்சிகளை நிறைவுசெய்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 400 குடும்பநல சுகாதார தாதியர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 8000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்படு்ம தாதிய பயிற்சி பீடம் மூலம் மேலும் 2000 தாதி பட்டதாரிகள் உருவாகவுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

 


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்