CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

ராஜராஜ சோழருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்து!

ராஜராஜ சோழருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்து!

பண்டைய தமிழ்ச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீதுகாவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு - திருப்பனந்தாள் காவல்துறையினரால் அவர் மீது இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டம் - திருப்பனந்தாள் பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், பண்டைய தமிழ்ச் சக்கரவர்த்தி ராஜராஜ சோழரின் காலத்தில் 400 பெண்கள் விலைமாதராக மாற்றப்பட்டனரென விமர்சித்திருந்தார்.

 

இதனையடுத்து, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை, இந்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி காவல்துறையினரிடம் மனுவொன்றைச் சமர்ப்பித்திருந்தது.

 

இந்த நிலையில், கலகம் உண்டாக்குதல் மற்றும் சாதிமத மோதல் உருவாக்குதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ், தமிழ்நாடு காவல்துறை, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்