CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான  குற்றப்பத்திரிகை ஒரு மாதத்திற்குள் - உயர்நீதிமன்றம் கட்டளை

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான குற்றப்பத்திரிகை ஒரு மாதத்திற்குள் - உயர்நீதிமன்றம் கட்டளை

பெருந்தெருக்கல் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீதான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது முறைப்பாட்டுக்கான குற்றபத்திரிகையை ஒரு மாத காலத்திற்குள் தாக்கல் செய்யுமாறு சட்ட மாஅதிபருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையை இன்று தொடக்கம் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்புத் தீர்மானத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த நீதியரசர்கள் குழாம் தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்த கருத்துகளால் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்து அவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இந்த விவகாரம் தொடர்பில் இன்று உயர்நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்