CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

இலஞ்ச ஊழல் குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குறித்து நீதிமன்றம்

இலஞ்ச ஊழல் குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் குறித்து நீதிமன்றம்

ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானி மகாநாம ஹேவகே மற்றும் அரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோர் தொடர்பிலான இலஞ்ச ஊழல் வழக்கை மூவரடங்கிய நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்காக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த இரண்டு பிரதிவாதிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதால், அவர்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அனுமதிக்குமாறு இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவினால் , பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் அதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் இன்று வழங்கியுள்ளார்.

கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு சொந்தமான இயந்திர உபகரணங்கள் மற்றும் கட்டடத்தை பொறுப்பளிப்பதற்காக 540 மில்லியன் ரூபா இலஞ்சம் கோரியதுடன், அதில் 20 மில்லியன் ரூபாவை முற்பணமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் பிரதானியும், அரச மரக்கூட்டுத்தாபன முன்னாள் தலைவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.



முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்