CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

சஹ்ரான் ஹாஸிமின் பிரதான இணைப்பாளர் கைது

சஹ்ரான் ஹாஸிமின் பிரதான இணைப்பாளர் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமின் பிரதான இணைப்பாளர் என்ற சந்தேகத்தின் பேரில்,  காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

காவல்துறையின் விசேட அணியொன்றே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

குருநாகல் மாவட்டம் - கட்டுபொத்த - நாரம்மல பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அரோஷ் என்ற பெயருடைய இந்த சந்தேகநபர் சஹ்ரான் ஹாஸிமுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சஹ்ரான் ஹாஸிமின் குழுவில், இந்த சந்தேகநபர் தீவிர உறுப்பினராக இருந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, சந்தேகநபரிடமிருந்து நிலத்தை ஸ்கான் செய்யும் கருவியொன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தக் கருவி மூலம் நிலத்தின் 80 அடி ஆழம் வரை ஸ்கான் செய்ய முடியுமென கூறப்படுகின்றது.

இது போன்ற கருவிகள் புதையல் தோண்டுவதற்கான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்