CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

NTJ குறித்து, 5 ஆண்டுகளுக்கு  முன்னரே எச்சரிக்கை - பாதுகாப்புத் தரப்பு கவனயீனம்

NTJ குறித்து, 5 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கை - பாதுகாப்புத் தரப்பு கவனயீனம்

உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நிகழ்த்தி, பல உயிர்களின் இழப்பிற்கு காரணமான பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் குறித்து, 5 ஆண்டுகளுக்கு முன்னரே, பாதுகாப்புத் தரப்பிற்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த எச்சரிக்கையை தாம் வழங்கியதாக, அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் முஃப்தி மொஹம்மட் ரிஸ்வி (Mufthi Mohammed Rizwi) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நேற்றைய தினம் முன்னிலையாகிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தாம் பாதுகாப்புத் தரப்பிற்கு,  தேசிய தௌஹீத் ஜமாத் குறித்த  எச்சரிக்கையை வழங்கியதாக, முஃப்தி மொஹம்மட் ரிஸ்வி சுட்டிக்காட்டியுள்ளார்.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்