CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

ஐ.தே.க முன்மொழிந்த அமைச்சு பதவிகளை ஜனாதிபதி நிராகரித்தார்

ஐ.தே.க முன்மொழிந்த அமைச்சு பதவிகளை ஜனாதிபதி நிராகரித்தார்

பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியால் முன்மொழியப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல், ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் அண்மையில் தமது பதவிகளைத் துறந்திருந்தனர்.

இதன் காரணமாக அவர்களது அமைச்சுப் பொறுப்புகள் வெற்றிடமாகிய சூழல் ஏற்பட்டிருந்தது.

இதன் போது, அந்த அமைச்சுப் பொறுப்புகளின் வெற்றிடத்தினை நிரப்புவதற்காக சிலருடைய பெயர்களை ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் முன்மொழிந்ததாகவும், அந்தப் பெயர்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், வெற்றிடமான அமைச்சுகளுக்குரிய பதில் அமைச்சர்களாக, தற்போதைய இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நியமித்திருந்தமை சுட்டிக் காட்டத்தக்கது. 


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்