CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

capitalnews capitalnews.lk Gotabaya Rajapaksa
   
SLPP 6,924,255 53.37 %
capitalnews capitalnews.lk Sajith Premadasa
   
NDF 5,564,239 42.88 %
capitalnews capitalnews.lk Anura Kumara Dissanayaka
   
NMPP 418,553 3.23 %
    # Vanni   District > Mannar   Polling Division > NDF - 53,602 - 84.73% | SLPP - 6,435 - 10.17% | DUNF - 695 - 1.17% |     # Jaffna   District > Chavakachcheri   Polling Division > NDF - 28,007 - 84.75% | SLPP - 1,775 - 5.37% | DUNF - 656 - 1.99% |     # Batticaloa   District > Padiruppu   Polling Division > NDF - 54,132 - 83.05% | SLPP - 7,948 - 12.19% | DUNF - 767 - 1.18% |     # Colombo   District > Kotte   Polling Division > SLPP - 31,853 - 54.56% | NDF - 22,628 - 38.76% | NMPP - 2,439 - 4.18% |     # Kegalle   District > Ruwanwella   Polling Division > SLPP - 35,714 - 56.71% | NDF - 24,604 - 39.07% | NMPP - 1,403 - 2.23% |
Huawei Smart Phones மற்றும் Tab களுக்கான பணத்தை மீளளிக்க  singer இணங்கியுள்ளது

Huawei Smart Phones மற்றும் Tab களுக்கான பணத்தை மீளளிக்க singer இணங்கியுள்ளது

Huawei SmartPhones மற்றும் Tabs இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர் என்ற வகையில் Singer Sri Lanka PLC, தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய Huawei ஸ்மார்ட்போன் அல்லது Tabs கொள்வனவின் போது "பணத்தினை மீளளிக்கும் உத்தரவாதத்தை" வழங்க தீர்மானித்துள்ளது. அதாவது பின்வரும்அப்ளிகேஷன்களில், கூகுள் பிளே, ஜீமெயில், கூகுள் மெப், கூகுள் கெலரி, குரோம், யுடியூப், பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் வாட்சப் ஆகியவற்றில் ஏதேனும் இயங்காமல் இருப்பின் வாடிக்கையாளரின் பணம் 100% மீளளிக்கப்படும். 

Huawei உலகின் மிகப்பெரிய மற்றும் முன்னணி ICT நிறுவனமாக வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் முதற்தர ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமாக தெரிவானது. 2012   ஆண்டு முதல் Huawei இற்கான அங்கீகரிக்கப்பட்ட தேசிய விநியோகஸ்தராக இருப்பதுடன், சிங்கர் உலகின் மிக புதுமையான மற்றும் முதல் ஸ்மார்ட்போன்களை இலங்கை சந்தைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த வெற்றி பயணத்தைத் தொடரவும், அதன் நுகர்வோருக்கு சிறந்த புத்துருவாக்கங்களை வழங்கும் பொருட்டும், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட Huawei Smart Phones மற்றும் Tabsகளை வாங்கிய தினத்திலிருந்து 2 வருட காலத்திற்கான இந்த அறிவிப்பை சிங்கர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் மற்றும் Tabs ஆகியவற்றுடன் வழங்கப்படும் வழக்கமான வன்பொருள் மற்றும் மென்பொருள் உத்தரவாதத்துக்கு மேலதிகமான சிறப்பு உத்தரவாதமாக இது அமையவுள்ளது.

" Huawei பல வருடங்களாக இலங்கையின் விருப்பத்துக்குரிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமாக இருப்பதுடன் ‘பண மீளளிப்பு உத்தரவாதம்' அதன் வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் அப்ளிகேஷன்களான, கூகுள் பிளே, ஜீமெயில், கூகுள் மெப், கூகுள் கெலரி, குரோம், யுடியூப், பேஸ்புக், இன்ஸ்டகிராம் மற்றும் வாட்சப் ஆகியவற்றில் எதாவது இயங்காமல் இருக்கும் பட்சத்தில் அவை சிங்கரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு பின்னர் உறுதி செய்யப்பட்டவுடன் முழுமையான பண மீளளிப்பு மேற்கொள்ளப்படும்,” என  ஜகத் பெரேரா, Singer இன் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள அப்ளிகேஷன்களில் ஏதேனும், தனது Huawei சாதனத்தில் சரியாக இயங்கவில்லை என நுகர்வோர் கண்டறிந்தால், நுகர்வோர் அந்த சாதனத்தை அதற்கான அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு இலவசமாக சோதனைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

இந்தத் திட்டம் நுகர்வோர் நிறுவனத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேம்படுத்துமெனவும், நிறுவனம் மற்றும் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் பங்காளர்களிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் சிங்கர் நம்புகின்றது. Huawei ஸ்மார்ட்போன் அல்லது Tabs ஐ புதிதாக வாங்கும் போதும் சிறப்பு உத்தரவாத அட்டை வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு,  நுகர்வோர் சிங்கர் துரித அழைப்பு இலக்கமான 0115 400 400 ஐ அழைக்க முடியும்.



capitalnews.lk

capitalnews.lk

முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்