CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களினால் வெற்றி

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களினால் வெற்றி

12 ஆவது உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

இதன்படி, பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் நிறைவில், 7 விக்கெட்டுகளை இழந்து, 308 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணிக்காக Haris Sohail 89 ஓட்டங்களையும்,  Babar Azam 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் Lungi Ngidi 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில், 309 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து, 259 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

தென்னாபிரிக்கா சார்பில் Faf du Plessis 63 ஓட்டங்களையும், Andile Phehlukwayo ஆட்டமிழக்காது 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணிக்காக Wahab Riaz மற்றும் Shadab Khan ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

12 ஆவது உலகக்கிண்ண தொடரின் 31 ஆவது போட்டி, இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்