CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

புதிய சங்கம் ஒன்றினை உருவாக்கும் யோசனையில் அத்துரலிய ரத்ன தேரர்

புதிய சங்கம் ஒன்றினை உருவாக்கும் யோசனையில் அத்துரலிய ரத்ன தேரர்

தமிழ், சிங்கள வியாபாரிகளை ஒன்றிணைத்து வர்த்தக சங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - குளக்கோட்டன் மண்டபத்தில் நேற்ற  இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடியதுடன், இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழ், சிங்கள வியாபார சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கும், தீவிரவாதத்திற்கு எதிராக இருக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற நாட்டின் முன்னேற்றத்தை விரும்புகின்ற முஸ்லிம் மக்களையும் தாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் காணப்படுகின்ற இயற்கை துறைமுகத்தை அமெரிக்க நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தேரர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய இது தொடர்பான கலந்துரையாடல்  இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், இதன்போது மதத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீனாவில் உள்ள கூட்டுறவு வங்கி முறைமையை இலங்கையிலும் உருவாக்க வேண்டும் எனவும் அவ்வாறு உருவாக்கப்பட்டால் வியாபாரிகளின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரதன தேரர் மேலும் கூறியுள்ளார்.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்