CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நாட்டில் அதிகமான வறட்சிநிலை- 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் அதிகமான வறட்சிநிலை- 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் தற்பொழுது நிலவும் வறட்சியுடனான காலநிலையின் காரணமாக, 4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், வரட்சியினால் வட மாகாணத்திலுள்ளவர்களே பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக, இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி  தெரிவித்துள்ளார்.

அத்துடன்  வடமாகாணத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடி நீர் விநியோகப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாணத்திலுள்ள இடர் முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டியுள்ளார்.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்