CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்-ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்-ரவூப் ஹக்கீம்

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கண்டி - தெல்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற உத்தரவாதம் கிடைக்கப்பெறாமல், மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பதில் எந்த பிரயோசனமும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்  சுட்டிக்காட்டியுள்ளார். 

சிலரது பயங்கரவாத செயற்பாட்டின் காரணமாக, அனைத்து முஸ்லீம்களையும் சந்தேகத்துடன் பார்க்கும் நிலை தோன்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான அநியாயங்களை சர்வதேச சமூகம் அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்  ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்