CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

அநுராதபுரம் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் விளக்கமறியல்

அநுராதபுரம் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட எட்டு பேருக்கும் விளக்கமறியல்

கைது செய்யப்பட்டுள்ள அநுராதபுரம் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் உணவு மற்றும் மருந்தக பரிசோதகராக கடமையாற்றிய ஆனந்த வேரகொடகேவின் வீட்டிற்கு  1999 ஆம் ஆண்டு கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அநுராதபுரம் மாநகர சபையின் முதல்வர் உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்