CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

ஞானசாரவுக்கான பொது மன்னிப்பு:  அடிப்படை உரிமை மீறலா?

ஞானசாரவுக்கான பொது மன்னிப்பு: அடிப்படை உரிமை மீறலா?

கலகொட அத்தே ஞானசார  தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு அளித்தமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக தெரிவித்து பிரதீப் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்றத்துக்கு அவதூறு கூறிய குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட 19 வருட சிறைத்தண்டனை, 06 வருட கடூழிய சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது,

நீதிமன்றத்தின் மீது அவதூறு கூறிய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது அரசியலமைப்புக்கு முரணானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்,

இதன் காரணமாக பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமையுடன் தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்துக்கு கொண்டு வந்து விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

எனவே, அரசியலமைப்பிலுள்ள  அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளதாகவும், ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பை வலுவிழக்க செய்ய வேண்டும் மனுதாரர் கோரியுள்ளார்.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்