CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

19 ஆவது திருத்த விவகாரம்:

19 ஆவது திருத்த விவகாரம்: "முடியாது" என்றார் மகிந்த

தற்போதைய சூழ்நிலையில், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை தடை செய்ய முடியாது என  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்,

தேர்தலொன்றை நெருங்கியுள்ள நிலையில் இவ்வாறான திருத்தமொன்றை மேற்கொள்வது இயலாத காரியம் என  அவர் குறிப்பிட்டுள்ளார்,

அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதி தற்போதாவது அறிந்துள்ளமை குறித்து  தாம் அவருக்கு நன்றி கூறுவதாக, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

ஹங்குரங்கெத்த பகுதியில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள்ளார்.

இலங்கையை சிறந்த நாடாக கட்டியெழுப்ப, 18 ஆம் மற்றும் 19 ஆம் திருத்தங்கள் தடை  செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன  நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

இதனைச் சுட்டிக்காட்டியே, மகிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் ஹங்குரங்கெத்த பகுதியில்  வைத்து இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின்  19 ஆவது திருத்தத்தை தடை  செய்யக் கூடாது என, சுயாதீன தேர்தல்கள் கண்காணிப்புக்குழுக்கள் கூறுகின்றன. 




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்