CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு ஆபத்தா?

இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு ஆபத்தா?

குடிவரவு - குடியகல்வு சட்ட விதிமுறைகளை மீறி, நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு நாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவர்களில், இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்தவர்களே அதிகமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்