CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

வெற்றிப்பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாழ்த்துக் கூறினார் துருக்கி ஜனாதிபதி

வெற்றிப்பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வாழ்த்துக் கூறினார் துருக்கி ஜனாதிபதி

வரலாற்றுச் சிறப்பு மிக்க இஸ்தான்புல் நகரத்தின் உள்ளூராட்சி சபை முதல்வர் பதவிக்கான மீள் தேர்தலில், வெற்றி பெற்ற தமது எதிர்க் கட்சியின் வேட்பாளருக்கு  , துருக்கி ஜனாதிபதி  Recep Tayyip Erdoğan தமது வாழ்த்தினைப் பகிர்ந்துள்ளார்.

துருக்கியின் தலைநகரமாக அங்காரா உள்ள போதும், இஸ்தான்புல்லே வரலாற்றுக் காலம் முதலாக அந்த நாட்டின் பிரதான நகராக அறியப்பட்டு வருகின்றது.

துருக்கியின் கலாசார, பொருளாதார, வரலாற்று மத்திய கேந்திரமாக விளங்கும் இஸ்தான்புல் ந்கரத்தின் ஆளுகையை, துருக்கியின்  ஆளும் கட்சி இழந்துள்ளது.

துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியின் வேட்பாளரான Ekrem Imamoglu, 7 இலட்சத்து 75 ஆயிரம் வாக்குகளால் முன்னணியில் இருப்பதாக பிபிசி தெரிவிக்கின்றது.

இதனையடுத்து, துருக்கியின் ஜனாதிபதியான Recep Tayyip Erdoğan இன் கட்சியும் கால் நூற்றாண்டு காலமாக, இஸ்தான்புல்லை தனது ஆளுகையின் கீழ் வைத்திருந்ததுமான "நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி" இந்தத் தேர்தலினூடாக, தனது ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளது.

இஸ்தான்புல்லின் இந்த மீள் - தேர்தலில் தோல்வியுற்றாலும், "நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியே" துருக்கியின் ஆட்சி அதிகாரத்தினை தன் வசப்படுத்தி வைத்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

இந்த நிலையில், குறித்த தேர்தலில் "நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி"யினால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த துருக்கியின் முன்னாள் பிரதமர் Binali Yildirim, தனது தோல்வியை ஏற்றுக் கொண்டார்.

இதேவேளை, தனது கட்சியை இஸ்தான்புல்லில் தோல்வி அடையச் செய்த எதிர்க்கட்சியின் வேட்பாளரான Ekrem Imamogluவை துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan வாழ்த்தியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூகவலைத்தளப் பக்கத்திலேயே துருக்கி  ஜனாதிபதி இந்த வாழ்த்தினைப் பகிர்ந்துள்ளார்.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்