CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சரியாக மதிப்பிடப்படுமா பொருளாதார பாதிப்பு?

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: சரியாக மதிப்பிடப்படுமா பொருளாதார பாதிப்பு?

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட, பொருளாதார பாதிப்பை மதிப்பீடு செய்து, அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீட்டு பணிகள் மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் கடந்த மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், ஒவ்வொரு மாதமும் பணிபுரிந்த சேவையாளர்களின் எண்ணிக்கை, மொத்த வருமானம் என்பவை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான நிறுவனங்கள், வாகனங்கள், கட்டடங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றவை தொடர்பிலும் தகவல்களும் சேகரிக்கப்படவுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்