CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கும் தீர்மானத்தை மாற்றமுடியாது - ஈரான்

யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கும் தீர்மானத்தை மாற்றமுடியாது - ஈரான்

யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கும் தீர்மானத்தை மாற்றமுடியாது என ஈரான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் தனது முழு உரிமைகளையும் அடையும்வரை தமது முடிவை மாற்றப் போவதில்லை என ஈரான்  அறிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் மூலம் அனுமதிக்கப்பட்டதை விட  யுரேனியத்தை செறிவூட்டும் அளவை உயர்த்துவதற்கான முடிவை மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஈரானை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தமது நாட்டைப் பாதுகாப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் தவறியுள்ளதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்