CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத  கிரிக்கட் ரசிகர்கள்..!

இந்திய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத கிரிக்கட் ரசிகர்கள்..!

12 ஆவது   உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியுசிலாந்து அணியிடம்  இந்திய அணி தோல்வியடைந்தமை குறித்து கிரிக்கட் ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து சுமார் ஒரு பில்லியன்  கிரிக்கெட் ரசிகர்கள் வெறுப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன்  இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் Hardik Pandya வுக்கு முன்பாக Dhoni களமிறங்கியிருந்தால் போட்டியின் முடிவு  இந்திய அணிக்கு சார்பாக அமைந்திருக்கும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

12 ஆண்டுகளின் பின்னர்  இந்திய அணி சந்தித்த பாரிய தோல்வி இதுவாகும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, உலகக் கிண்ண  கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய  அணிகள் இன்று மோதுகின்றன.

Birmingham  இல் நடைபெறவுள்ள இந்த போட்டியானது இலங்கை நேரப்படி மாலை   மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில்  வெற்றிபெறும் அணியுடன் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி 18 ஓட்டங்களினால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்