CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நாளை கூடுகிறது நாடாளுமன்றத் தெரிவுக் குழு

நாளை கூடுகிறது நாடாளுமன்றத் தெரிவுக் குழு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழு மீண்டும் நாளைய தினம் கூடவுள்ள நிலையில்,வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்படுபவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய,அரச புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிக் காவல்மா அதிபர் நிலந்த ஜயவர்தன,குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் காவல்துறை அதிகாரி ஷானி அபேசேகர,பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் காவல்துறை கான்ஸ்டிபள் தரங்க பத்திரண ஆகியோர் அழைக்கப்படவுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழு நாளைய தினம் காலை 9.30 இற்கு கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் நாளைய விசாரணைகள் ஊடகங்களில் வெயிடப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும்,விசாரணைகளின்  குரல்பதிவுகள் மாத்திரம் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்