CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

புத்தளம் - களப்பை பகுதியில் 9 பேர் கைது

புத்தளம் - களப்பை பகுதியில் 9 பேர் கைது

புத்தளம் - களப்பை கடற்பரப்பில் உரிய அனுமதி பத்திரமின்றி கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு இன்று அறிவித்துள்ளது. 

கற்பிட்டி பகுதியை சேர்ந்த 22 வயது முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது 4 டிங்கி படகுகள் மற்றும் 4 மீன்பிடி வலைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்