CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

அவுஸ்ரேலியாவில்  இடம்பெற்ற படகு விபத்தில் மூவர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் மூவர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

சிட்னிக்கு வடக்கே 160 கிலோ மீற்றல் தொலைவில் இன்று காலை இந்த படகு விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மேலும் இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவுஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளனர்.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்