CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் போது காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்த யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடாத்தப்பட்ட தாக்குதலின் போது காயமடைந்த 22 வயதுடைய  யுவதி ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி மேலதிக சிகிச்சைகளுக்காக, ராகமை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி  80 வரை நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்