CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

சூடு பிடித்தது நம்பிக்கையில்லா பிரேரணை மீதான  விவாதம்

சூடு பிடித்தது நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று, நடைபெற்றது.

குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே இந்த விவாதம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய  நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் ரிஷாட் பதியுதீன் குற்றமற்றவர் எனக் கூறப்பட்ட போதும், சிலர் தேவையற்ற விடயங்களை கூறுவதாக, விமர்சித்தார்,

நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தின் போதே அமீர் அலி இதனைக் குறிப்பிட்டார்.

">

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தனிப்பட்ட தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டு, அரசாங்கத்தை பாதுகாத்து வருவதாக, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, இன்றைய நாடாளுமன்ற அமர்வில் குறிப்பிட்டார்.

">

அத்துடன், சுமந்திரனும் அனுரகுமார திஸாநாயக்கவும் இணைந்தால், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்ள முடியும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த கூறினார்.

">

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளாத பெரும்பான்மையினர், தமது நெருக்கடியான காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை ஏன் கோர வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் கேள்வியெழுப்பினார்

">

மலையக மக்களின் நலனுக்காக அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார்,  இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, கூறினார்,

">

இதேவேளை சியோன் தேவாலய தாக்குதலில் சிறுவர்களே அதிகம் உயிரிழந்துள்ளமையினால்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிமல் லான்சா குறிப்பிட்டார்.

">




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்