CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விடை பெறுவதாக ரிஷாட் சவால்

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அரசியலிலிருந்து விடை பெறுவதாக ரிஷாட் சவால்

தம் மீது சுமத்தப்படுகின்ற  குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் பட்சத்தில், தாம் அரசியல் வாழ்க்கையிலிருந்து விடை பெறுவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சவாலை விடுத்தார்.

">

இதேவேளை, இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருகின்ற எரிபொருட்களை தடை செய்து, இலங்கைக்கு சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் விநியோகிப்போம் என பௌத மதகுரு ஒருவரினால்  முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் குறித்தும்  முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்துத் தெரிவித்தார்.

">

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, ரிஷாட் பதியுதீன் மீது முன்வைக்கப்படுகின்ற ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களை தாம்  நிரூபிப்பதாக குறிப்பிட்டார்

">

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்கவுக்கும் இடையில், வாக்குவாதம் இடம்பெற்றது.

">



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்