பொதுஜன பெரமுன மாநாட்டில் மஹிந்தவின் பெயர் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு!
- By Capital News --
- 11 Aug 2019
- 378
ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு தற்போது கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பலமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு வருகின்றது.
இதன் அடிப்படையில், ஏகமனதான விருப்பத்தின் பேரில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.