அபிராமியை ஆவேசமாக தாக்க முற்பட்ட முகேன் - வனிதாவின் சூழ்ச்சி அம்பலம்...!!!
- By Capital News --
- 13 Aug 2019
- 1069
பிக் பாஸ் மூன்றாம் பருவம் மிகப் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.
பிக்பாஸின் சொர்ணாக்கா எனப்படும் வனிதா மீண்டும் வீட்டுக்குள் வந்ததில் இருந்து நிகழ்ச்சி மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.
இந்நிலையில் 52ஆம் நாளான இன்று முகேன் அபிராமியைத் தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
காலையில் அபிராமியிடம் பேசும் வனிதா முகினின் தனிப்பட்ட விடயங்கள் குறித்து தெரிவிக்கிறார்.
"நீதானே முகின் பின்னால் போகிறாய்? அவன் ஹீரோவாகிட்டான், நீ ஸீரோவாகிட்ட" என்று ஏகத்துக்கும் ஏற்றி விடுகிறார்.
இதனை அபி, முகினிடம் விசாரிக்க போகிறார். இது முகினுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆத்திரமடையும் அவர் நாற்காலியைத் தூக்கி அடிக்கப் போகிறார்.
ஏற்கனவே அபியுடனான சண்டையில் முகின் கட்டிலை ஓங்கிக் குத்தி உடைத்திருந்தமை நினைவுகூரத்தக்கது.
இந்த தரமான சம்பவத்தை இன்று இரவு எதிர்பாருங்கள்!!!