CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கோட்டாபயவை நியமிப்பதற்கான காரணம் சரியானதே - பொன்சேகா (VIDEO)

கோட்டாபயவை நியமிப்பதற்கான காரணம் சரியானதே - பொன்சேகா (VIDEO)

நாட்டின் பாதுகாப்பிற்காக முன் நிற்கக்கூடிய நபர் கோட்டாபய ராஜபக்ஸ என்ற பொதுஜன பெரமுனவின் தீர்மானம் சரியானதே என நாடாளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்திய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பிலேயே, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்துகளை கூறியதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டமை குறித்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்து தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது, நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் கீழ் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானித்திருந்த நிலைமையிலேயே கோட்டாபய ராஜபக்ஸவை அவர்கள் வேட்பாளராக நியமித்துள்ளார்கள்.

அவ்வாறு பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் தீர்மானத்தை அவர்கள் மேற்கொண்டிருக்காது விட்டால், இலகுவாக அரசியலில் மிகவும் புரையோடிப் போயுள்ள பெசில் ராஜபக்ஸவை அவர்கள் தெரிவுசெய்திருப்பார்கள்.

எனவே நாட்டில் பாதுகாப்பு இல்லை என்ற நிலைப்பாட்டின் கீழ், அதற்குப் பொருத்தமான நபர் அவர்கள் தரப்பில் வேறு யாருமே இல்லையென்ற காரணத்தால் கோட்டாபயவை நியமித்திருக்கலாம். அந்த தீர்மானம் சரியானது என நான் எண்ணவில்லை.

ஆனாலும் அவர்களின் தரப்பில் அந்த முடிவை மேற்கொள்வதற்காக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட காரணிகள் சரியானவை  ஆகும். அதற்காக நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு இருக்கின்ற சிறந்த நபர் கோட்டாபய ராஜபக்ஸ என்று நான் கூறவில்லை. 



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்