CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நியூசிலாந்துக்கு தப்பிச்சென்ற இலங்கைப் பெண்ணுக்கு அகதி அந்தஸ்து

நியூசிலாந்துக்கு தப்பிச்சென்ற இலங்கைப் பெண்ணுக்கு அகதி அந்தஸ்து

தனது மகன் முன்னே கணவரால் துன்புறுத்தப்பட்டு, நியூசிலாந்துக்கு தப்பிச்சென்ற இலங்கைப் பெண்ணுக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பிறப்பிடமாக கொண்ட 39 வயதான பெண்ணும் 12 வயதான அவரது மகனுக்குமே நியூசிலாந்து அகதி அந்தஸ்தை வழங்கியுள்ளது.

கணவர் தம்மை கொல்லும் எண்ணத்தினைக் கொண்டுள்ளதாக அறிந்த குறித்த பெண் சுற்றுலா விசாவைப் பெற்றுக் கொண்டே நியூசிலாந்துக்கு முதலில் சென்றுள்ளார்.

அங்கிருந்து கொண்டே, நியூசிலாந்து அரசிடம் வேலை செய்யும் அனுமதியைக் கோரி விண்ணப்பித்திருந்தார்.

எனினும், அவரது தகைமையின்மையைச் சுட்டிக்காட்டி நியூசிலாந்து அரசு அவருக்கு அங்கு வேலை செய்வதற்கான அனுமதியை வழங்கவில்லை.

இதனையடுத்தே, அந்த இலங்கைப் பெண் தனக்கு அகதி அந்தஸ்து வழங்குமாறு கோரி விண்ணப்பித்திருந்தார்.

தாம் இலங்கைக்குத் திரும்புமிடத்து தமது கணவரால் தமக்கும் தமது மகனுக்கும் அபாயம் ஏற்படுத்தப்படும் வாய்ப்புள்ளதாக அவர் தமது கோரிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கணவரால் தாம் பாரியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் அந்த இலங்கைப் பெண் நியூசிலாந்து அரசிடம் குறிப்பிட்டிருந்தார்.

தாம் கணவரால் தாக்கப்படும் போது தம்மைக் காப்பாற்ற வந்த மகனும் தாக்குதலுக்கு உள்ளானமையையும் அவர் தமது அகதி அந்தஸ்துக் கோரிக்கையில் முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கும் அவரது மகனுக்கும் நியூசிலாந்தின் அகதி அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்