இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூஸிலாந்து தடுமாற்றம்
- By Capital News --
- 14 Aug 2019
- 95
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இன்று ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி மதிய போசன இடைவேளை வரை 30.2 ஓவர்களுக்கு 71 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுகளை இழந்து நியூஸிலாந்து அணி தடுமாறி வருகிறது.
நியூஸிலாந்து அணி சார்பாக, ஜீட் ரவல் 33 ஓட்டங்களையும்,டொம் லத்தம் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டதுன், அணித்தலைவர் கேன் வில்லியம்சன் ஓட்டமெதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி சார்பாக, சிறப்பாகப் பந்து வீசிய அகில தனஞ்செய, 11.2 ஓவர்களுக்கு 28 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தற்போது ஹென்றி நிக்கோலஸ் மற்றும் ரொஸ் டெய்லர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.