இடைக்கால வரவு – செலவுத்திட்டத்திற்கு அனுமதி...!
- By Capital News --
- 14 Aug 2019
- 79
2020 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கு அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான செலவீனம் அடங்கிய இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் முன்வைக்கப்பட்ட இதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறவுள்ளதுடன், அதன் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவைக்கு ஏற்றவாறு அரசாங்கத்தின் புதிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டு 2020 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தை தயாரிக்கும் பணிகளை சில மாதங்கள் பிற்போடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் இடைக்கால வரவு - செலவுத்திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் அனுமதியைப் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.